நடிகை விஜயசாந்தி இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் 1980ம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கிலாடி கிருஷ்ணடு' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் போலீஸ் கெட்டப் போட்டு விஜயசாந்தி நடித்த முதல் தெலுங்கு படம் 'கர்தவ்யம்' தமிழிலும் 'வைஜெயந்தி ஐபிஎஸ்' என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது கிரண்பேடி வாழ்க்கைய கொண்டு அடிப்படையாக எடுக்கப்பட்ட படம் ’வைஜெயந்தி ஐபிஎஸ்’ அப்படத்திற்காக தேசிய விருதையும் கைப்பற்றினார் விஜயசாந்தி இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார் அந்த காலக்கட்டத்தில் ஒரு கோடியை சம்பளமாக பெற்ற முதல் நடிகை இவர் தான் தனது வாழ்நாளில் தமிழ்நாட்டின் உயரிய விருதான கலைமாமணி மற்றும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்