பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம் இயல்பாகவே நடிப்பதில் வல்லவர் விக்ரம் ஆதித்த கரிகாலனாக அவதாரம் எடுத்த இவரை திரையில் காண பலரும் ஆவலாக உள்ளனர் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது இதற்காக படக்குழு நேற்று கேரளா சென்றது கேரளாவின் திருவனந்தபுரத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, மணிரத்னம், கார்த்தி, விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் செண்டை மேளம் வாசிக்கப்பட்டது நடிகர் விக்ரம் களத்தில் இறங்கி, அவரும் மேளத்தை வாசிக்க தொடங்கினார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது!