தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருப்வர் கமல்ஹாசன்

சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வுகளில் பயங்கர பிசியாக உள்ளார்

கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் அவர் நடித்திருந்தார்

இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்

அடுத்ததாக மணிரத்னத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹைதராபாத் சென்ற கமல், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்

பின்னர் பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்திருந்தார்

இதற்கிடையில் சென்னை திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

கமல் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்

இந்நிலையில் சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் இன்று வீடு திரும்பியுள்ளார்