IND VS SL : இந்தியா playing 11 யாரை களமிரக்குவது? குழப்பத்தில் டிராவிட்..

Continues below advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று மாலை, இரண்டாவது டி-20 போட்டி நடைபெற இருந்த நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று காலை, க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறியான தொண்டை கரகரப்பு இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, அவருக்கு ஆர்.டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram