Vinesh Phogat disqualified |’’என் தோழியின் நிலைமைநினைச்சு கூட பாக்கமுடியல!’’ - சாக்‌ஷி

Continues below advertisement

என்னிடம் பதக்கமிருந்தால் அதை கண்டிப்பாக வினேஷ்க்கு கொடுத்து இருப்பேன் அவளின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று  வினேஷ் போகத்துக்கு ஆதரவாக அவரது நண்பரும் மல்யுத்த வீராங்கனையுமான சாக்‌ஷி மாலிக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார் வினேஷ் போகத். காலிறுயிதியில்  நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை வீழ்த்தி சாதித்து காட்டினார். இதனால ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளதை பலரும் கொண்டாடினர்.

இந்தநிலையில் அவர் மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் அவர், 150 கிராம் எடை அதிகமாக உள்ளதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நேற்று இரவே அவரது உடல் எடை 2 கிலோ வரை உயர்ந்திருந்த நிலையில் இரவு முழுவதும் உடல் எடையை குறைக்க  எவ்வளவோ முயற்சித்தும் அவரால் உடை எடையை குறைக்க முடியாமல் போனது. 

இந்த நிலையில் அவருக்கு ஆதவராக அவரது தோழியும் மல்யுத்த வீரரருமான சாக்சி மாலிக் ஆதரவாக பதிவிட்டுள்ளார். 

சாக்சி  வெளியிட்டுள்ள அந்த பதிவில் என் இதயம் பதட்டமாகவும் கனமாகவும் இருக்கிறது, வினேஷ் இந்த ஒலிம்பிக்கில் செய்தது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
என்னிடம் பதக்கம் இருந்திருந்தால் என் பதக்கத்தை வினேஷுக்கு கொடுத்திருப்பேன். என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும் பலரும் வினேஷ் போகத்துக்கும் ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram