Vinesh Phogat disqualified |திடீரென கூடிய உடல் எடை..விடிய விடிய போராட்டம்! தீராத துயரில் வினேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய நிலையில் அவரது உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் முடியை வெட்டுவது என பல்வெறு முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் ஓலிம்பிக் தொடரில் தங்கம் வெல்வார் என்ற எதிர்க்கப்பட்ட வினேஷ் போகத் கூடுதல் எடைக்காரணமாக இன்று நடைப்பெற இருந்த இறுதிப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு குரல் எழுந்து வருகிறது,
நேற்றையை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக வினேஷ் போகத்தின் உடல் எடை 49.90ஆக இருந்தது. ஆனால் அரையிறுதி போட்டி முடிவடைந்த பின்பு வினேஷ் போகத் தனது எடையை சோதனை செய்துள்ளார். அப்போது வினேஷ் போகத் உடல் எடை 52.7 கிலோவாக உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற தனது உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்க்கொண்டார், இதற்காக ஸ்கிப்பிங், ரன்னிங், ஜாக்கிங் என்று அதிகம் வியர்வை வெளியேற்ற கூடிய கடினமான உடற்பயிற்சிகளை செய்துள்ளார். மேலும் உணவு எதுவும் உண்ணாமல் இரவு முழுக்க தனது பயிற்சியாளருடன் சேர்ந்து உடல் எடையை குறைக்க கடுமையாக முயற்சி செய்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் முடி வெட்டுதல், ரத்தம் வெளியேற்றுதல் என பல வழிகளில் தனது உடல் எடையை எப்படியாவது 50 கிலோவுக்குள் கொண்டு வர வேண்டும் என தனது பயிற்சியாளருடன் சேர்ந்து இரவு முழுக்க தூங்காமல் முயற்சி செய்தும் கடைசியில் 2.6 கிலோ மட்டுமே குறைக்க முடிந்தது.
இவ்வளவு முயன்றும் 100 கிராம் அதிகமாக இருந்ததால், ஒலிம்பிக் நிர்வாகத்தால் தகுதி நீக்கம்செய்யப்பட்டுள்ளார், பல கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.