Rahul Gandhi About Vinesh Phogat | ’’மீண்டு வாங்க வினேஷ்’’ தைரியம் கொடுத்த ராகுல்

Continues below advertisement

ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்கு துணையாக நிற்கும், அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் நபர் அல்ல என்று ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஓடி வந்து ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

"இதயங்களில் எப்போதும் சாம்பியன்தான்" இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, "பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரது காவியமான மன உறுதியும் பின்னடைவும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி சொன்னது என்ன? இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் நபர் அல்ல வினேஷ் போகத்; மீண்டும் அதே வலிமையுடன் மல்யுத்த களத்தில் வினேஷ் போகத் இறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது; வினேஷ் போகத், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தவர்; உங்களின் பலம் போன்று ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்கு துணையாக நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் பின்னடைவு கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை நிச்சயமாக உடைத்துவிட்டது. உலக சாம்பியனை தோற்கடித்த பெருமையுடன் பிரகாசிக்கும் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.

இந்த துரதிர்ஷ்டம் அவரது துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையில் ஒரு விதிவிலக்கு மட்டுமே. அதில் இருந்து அவர் எப்போதும் மீண்டு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களின் வாழ்த்துகளும் ஆதரவும் அவளுக்கு எப்போதும் உண்டு" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram