Modi about Vinesh phogat | ’’மோடி முதலைக்கண்ணீர்!’’பதக்கம் இழந்த வினேஷ் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Continues below advertisement

ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தை, இந்தியாவின் சாம்பியன் என மோடிமுதல் ஆளாய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மகளிருக்கு 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், வினேஷ் போகத் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஆனால், போட்டி நாளான இன்று, அவர் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடை இருப்பதாக கூறி, போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வினேஷ் போகத் இழந்துள்ளார்.

இந்தநிலையில் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக ஆதராவாக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். பதக்கம் வெல்லும் இந்தியர்களை பிரதமர் மோடி தொலைபேசி மூலம், தொடர்புகொண்டு வாழ்த்து கூறுவவது வழக்கம். ஆனால், நேற்று வினேஷ் போகத் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த பிறகும் வாழ்த்து கூறாமல் இருந்தார். இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, முதல் நபராக பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதனிடயே,  இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் பி.டி. உஷாவிடமும் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “வினேஷின் பின்னடைவை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பிரச்னை மற்றும் வாய்ப்புகள் குறித்து பி.டி உஷாவிடம் நேரடியாகத் தகவல்களைக் கேட்டறிந்தார். வினேஷின் பிரச்னைக்கு உதவுவதற்கான முழு அளவிலான வாய்ப்புகளை ஆராயும்படியும் கேட்டுள்ளார். வினேஷுக்கு உதவுமானால், தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பி.டி.உஷாவை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக” கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram