Arshad Nadeem Story | ஈட்டி வாங்க கூட காசு இல்ல!பாகிஸ்தானின் தங்க மகன் யார் இந்த அர்ஷத் நதீம்?

Continues below advertisement

ஈட்டி வாங்க கூட காசு இல்ல!பாகிஸ்தானின் த

10 வருட போராட்டம் கைவிட்ட அரசு, இப்படி பல சவால்களை சந்தித்து இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் எரிமலையாய் வெடித்து பாகிஸ்தானின் 32 வருட தாகத்தை தீர்த்து வைத்துள்ளார் அர்ஷத் நதீம். 

பாரிஸ் ஒலிம்பிக்கில் தனி நபர் ஈட்டி எரிதல் பிரிவில் 92. 97 மீட்டர்களில் எரிந்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த தங்க பதக்கத்தை  வெல்ல அவர் பயணித்த பாதை அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. 

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள சிறிய  கிராமமான மியான் சன்னு என்ற கிராமத்தில் தான். அவரது தந்தை முகமது அஷ்ரப் ஒரு கூலி தொழிலாளி. மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அர்ஷத்து சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் போன்ற விளையாட்களில் ஆர்வம் அதிகம்.

கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்பதே அர்ஷதின் கனவு. ஆனால் குடும்ப சூழ்நிலை அவரது கனவை புரட்டிப்போட்டது. ஆனால் அர்ஷத்தின் விளையாட்டு ஆர்வத்தை அவரது சகோதர்கள் அவரை தடகளத்தில் கவனம் செலுத்த சொல்லியுள்ளனர். 

அதன்பின்னால் தனது பள்ளியில் வட்டு எறிதல், ஈட்டு எறிதலில் கலந்து கொண்டு தினமும் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் மற்றவர்களை போல சரியான ஜாவ்லினுடன் தனது பயணத்தை தொடங்கவில்லை, கிராமத்தில் உள்ள ஒரு முதியவரிடம் மூங்கில் குச்சியை வைத்து அதை கூர்மையாக சீவி அதை வைத்து தான் தனது பயிற்சியை முதன் முதலாக தொடங்கியுள்ளார்.

இதன் பிறகு அர்ஷத்தின் கிராமத்தை சேர்ந்த ரஷீத் அகமது சாகி என்பவர் தான் அர்ஷத்துக்கு ஈட்டி எறிதலின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார், அது வரை எல்லா விளையாட்டிகளையும் பயிற்சி செய்து வந்த அர்ஷத் முழு நேரமும் ஈட்டி எறிதலில் முழு வீச்சாக குதித்தார்.

இந்த நிலையில் 2014 ஆண்டு ஐந்து முறை பாகிஸ்தான் தேசிய சாம்பியனும் பயிற்சியாளரான சையத் ஹுசைனை சந்திக்கும் அவருக்கு கிடைத்தது. 
அப்போது அர்ஷத்திற்கு அவர் முன்பு ஈட்டி எறியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அர்சத்தால் 60 மீ தூரம் வீச முடியாமல் போனது. ஆனால் வெறும் கையோடு வீட்டிற்கு செல்ல அர்ஷத்தின் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. 

உடனடியாக பயிற்சியாளர் ஹூசைனை சந்தித்து தனக்கு மீண்டும் வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதிதீவிர பயிற்சியில் ஈடுப்பட்டார், சொன்ன மாதிரியே ஒரு மாதம் கழித்து 65 மீ தூரம் வீசி பயிற்சியாளர் ஹூசைனை ஆச்சர்யப்படுத்தினர். 

இதன் பின்னர் WAPDA  என்ற குழுவில் சேர்த்து அர்சத்தின்  பயிற்சி அளித்தார், இது தான் அவரின் வாழ்க்கையை திருப்பியது. 
2015 பாகிஸ்தான் தேசிய போட்டிகளில் 70.46மீ தூரம் வீசியது பாகிஸ்தான் தடகள அணிக்கே ஒரு நம்பிக்கையை கொடுத்தார். அன்று ஆரம்பித்தது அவரது பத்க்க வேட்டை 2018 ஆசிய போடியில் வெண்கலம், 2022 காம்வெல்த் போட்டிகளில் தங்கம், 2023 உலக சாம்பியன்சிப் தடகள போட்டிகளில் வெள்ளி என்று தனது பதக்க சூட்கேசை நிரப்பினார் அர்ஷ்த் நதீம் 

32 ஆண்டுகளாக மெடலுக்காக காத்துக்கொண்டிருந்த ஓட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் எங்கயோ லாகூரில் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு கூலி தொழிலாளியின் மகனான அர்ஷத், கிராமத்தினர் கொடுத்த பணத்தை வைத்து பயிற்சி செய்து  இன்று பாகிஸ்தானுக்காக தங்கம் வாங்கி கொடுத்த தங்க மகனாக தனது கிராமத்திற்கும், நாட்டிற்க்கு  தந்தைக்கும் பெருமை சேர்த்துள்ளார்,

ங்க மகன் யார் இந்த அர்ஷத் நதீம்?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram