Vinesh Phogat Retirement | வினேஷ் போகத் எடுத்த அதிர்ச்சி முடிவு கலக்கத்தில் WFI

Continues below advertisement

தன்னிடம் போராட சக்தி இல்லை என்று ஒலிம்பிக்கில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட  மல்யுத்த வீராங்கனையான  வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வை  அறிவித்துள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.. நேற்று இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில் கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், பேரிடி ஒன்றை ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு தந்தது. 

50 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்தால் அவர் போட்டியிட தகுதியில்லை என்று அவரை தகுதிநீக்கம் செய்தது.

இந்த நிலையில், இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சோகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மல்யுத்தத்தில் இருந்து தான்  ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். 

நேற்று இறுதிப்போட்டிக்கு முன்பாக எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 29 வயதான வினேஷ் போகத் ஓய்வு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சொல்லியிருப்பதாவது, “ எனக்கு எதிராக மல்யுத்தம் வென்றது. நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும், எனது தைரியமும் சிதறடிக்கப்பட்டது. குட்பை மல்யுத்தம் 2001-2024. உங்கள் அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். தன்னிடம் போராட சக்தி இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.”

 வினேஷ் போகத்தின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு இந்த  ரசிகர்களுக்கு பெரும் சோகக்தை  ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram