ABP News

Angela Carini vs Imane Khelif | ”நீ பெண்ணே கிடையாது” 46 நொடிகளில் முடிந்த மகளிர் குத்துச்சண்டை!

Continues below advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண் குத்துச்சண்டை வீராங்கனையுடன் ஆண் குத்துசண்டை வீரர் போட்டியிட்ட சம்பவம் விளையாட்டு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகமும் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது..

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான, 66 கிலோ எடை பிரிவில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணி, அல்ஜீரிய வீராங்கனை இமன் கலிப் ஆகியோர் மோதினர்.

வெறும் 46 நோடிகளே சென்றிருந்த நிலையில், இமன் கலீப் முகத்தில் விட்ட ஒரு பஞ்சை சமாளிக்க முடியாமல், ஏஞ்சலா தடுமாறினார். இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார் ஏஞ்சலா.

மேடையிலேயே கதறி அழுத ஏஞ்சலா கரீன், இவர் பெண்ணே கிடையாது, ஒரு ஆணுடன் என்னால் போட்டி போட முடியாது என்று கூறியது தான் ஒட்டுமொத்த உலகையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

வெற்றியாளரை நடுவர் அறிவித்த போது கூட கைக்குழுக்க வந்த இமான் கலீப்பை தவிர்த்து விட்டு சென்றார் ஏஞ்சலா. இத்தகையை சூழலில் தான் மகளிருக்கான குத்துசண்டை போட்டியில் பங்கேற்ற இமன் கலீப் உடலில் ஆண்களுக்கு இருப்பது போன்று டெஸ்டோஸ்டிரான் சுறப்பதாகவும், அதனால் அவர் பெண்ணே இல்லை, அவரை எப்படி மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க அனுமதித்திர்கள் என்ற சர்ச்சை புதாகரமாக வெடித்துள்ளது..

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின சோதனையில் தேர்ச்சி பெறாததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

பாலினத்தை அறியும் மருத்துவ தேர்வில் ஆணுக்குரிய டி என் ஏ இமான் கலிபீடம் அதிகமாக இருப்பதாக சொல்லபட்டது. 

ஏனினும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிகள் படி இமான் கலிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாத ஒருவரால், எப்படி ஒலிம்பிக்கில் மட்டும் பங்கேற்க முடியும் என்று கேள்வி எழுப்பும் பலர்  #IStandWithAngelaCarini என்று ஹாஷ்டாக்கை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஒலிம்பிக் கமிட்டியின் செய்தி தொடர்பாளர், மகளிர் பிரிவில் போட்டியிடும் அனைவருமே அதற்கான தகுதியை பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.

இதில் எந்த முறைகேடும் இல்லை. இமான் கலிபின் பாஸ்போர்ட்டில் அவர் மகளிர் என்று தான் இருக்கிறது. அவர் மகளிர் என்பதால் தான் இந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் உலகம் முழுவதும் தற்போதும் புதாகரமாகி விவாத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram