Arshdeep Singh | நீங்க என்ன டோனியா? சொதப்பிய அர்ஷ்தீப்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

உங்க மனசுல என்ன பெரிய தோனினு நினைப்பா அர்ஷ்தீப்னு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் தேவைப்படும் போது சிக்ஸ் ஆசைப்பட்டு விக்கெட்டு கொடுத்த அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

இந்திய மற்றும் இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் கொழும்புவில் நடந்தது, இந்த போட்டியில் டாஸ் ஜெயிச்ச இலங்கை அணி முதல் பேட்டிங் செய்து 230 ரன்கள் எடுத்தது. 

டார்க்கேட் சின்னது தானே என்று களமிறங்கிய அணி ஒப்பனர்கள் நல்ல ஒரு ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். ஆனா 75-0 131-5னு தடுமாறிட்டு இருந்த அப்போ அக்சர் பட்டேலும், கே.எல் ராகுலும் நிதானமாக ஆடி அணியை சரிவை மீட்டாங்க, ஆனா ரெண்டு பேருமே அவுட் ஆகி வெளியேற பின் வரிசை ஆட்டக்காரர்களுடன் தனந்தனியா போராடிட்டு இருந்தார் சிவம் துபே, வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டப்போ துபே எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் வெளியேறினார். 

வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டப்போ இறுதி பேட்ஸ்மேனாக உள்ள வந்தார் அர்ஷ்தீப் சிங், தன் சந்தித்த முதல் பந்தை சிக்ஸ் அடிக்க வேண்டும் அவசரப்பட்டு ஆடி தனது விக்கெட்டை மட்டும் பறிக்கொடுத்தது மட்டும் இல்லாமல், இந்திய அணி சுலபமாக வெற்றிப்பெற வேண்டிய போட்டியை டையில் முடிய காரணமானார்.

இதனால் கடுப்பான இந்திய ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங்கை  நீங்க தோனியா சிக்ஸ் அடிச்சு மேட்சை முடிக்க என்று  சமூக வலைதளங்களில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி வருகின்றனர்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola