IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | Ashwin
பழைய சிஎஸ்கே அணியை மீண்டும் உருவாக்கும் முனைப்பில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளான அஸ்வின், ரச்சின், கான்வே ஆகியோரை தட்டி தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் யாரை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் இருந்தது. அர்ஷ்தீப் சிங், சாஹல், முகமது ஷமி, கே. எல். ராகுல் ஆகியோரை வாங்க சென்னை அணி முயற்சி செய்தது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இச்சூழலில் தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சீசன் 17ல் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினை சிஎஸ்கே அணி 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல், நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் அமர்வில் யாரையும் வாங்காமல் இருந்த சிஎஸ்கே இரண்டாவது அமர்வில் தங்களது வேட்டையை தொடங்கியது. இதன் மூலம் சென்னையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோபோல், கான்வே, ரச்சின் ஆகியோருன் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்திருப்பதன் மூலம் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடலுடன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.