IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul
அதிக விலைக்கு போட்டி போட்டுக் கொண்டு கே.எல் ராகுகளை ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான அவர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரிஷப பண்ட் 27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அவர்களை விட கே எல் ராகுல் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்? என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்..
மேலும் கிரிக்கெட் ஸ்ரேட்டஜிஸ்ட்டை விமர்சனம் செய்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில், முதலில் நட்சத்திர வீரர்கள், ஏலத்திற்கு வந்தனர். இதில், முதல் மார்க் பிளேயர் லிஸ்டில் 12 முக்கிய வீரர்களை தேர்வுசெய்து, இரு குழுக்களாக பிரித்து ஏலம் விட்டனர். முதல் குழுவில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், ஜாஸ் பட்லர், அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ரபாடா போன்றவர்கள் இடம்பெற்ற நிலையில், இவர்கள் அனைவரும் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள்.
இரண்டாவது குழுவில் இடம் பெற்ற இந்திய அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் கே.எல்.ராகுல் அதிக விலைக்கு ஏலம் போவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவரை அதிக விலைக்கு எடுக்க பெரிய ஏலம் நடைபெறவில்லை. அதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெறும் 14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் தரமான வீரரான கே எல் ராகுலின் வொர்த் கிரிக்கெட் ஸ்ரேட்டஜிஸ்ட்டுக்கு தெரியுமா தெரியாதா? என்று அவரின் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரை பொறுத்த அளவில் கடந்த 2024 சீசனில், 14 போட்டிகளில் விளையாடிய கே எல் ராகுல் 37.14 சராசரியில் 520 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 136.13 ஆக இருந்தது. இதுவரை 132 ஐபிஎல் போட்டிகள் விளையாடி உள்ள அவர் 4,683 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய ராகுல் அந்த சீசனில் ஆரஞ்சு கேப்பை பெற்றிருக்கிறார். மேலும் இவர் தலைமையில் லக்னோ அணி ஒரு முறை அரையிறுதி சுற்றுக்கும் சென்றிருக்கிறது.
அதே நேரம் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட் 111 போட்டிகள் விளையாடி 35.31 என்ற சராசரியில் 3,284 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரும் 115 போட்டிகள் விளையாடி 32.24 என்ற சராசரியில் 3,284 ரன்கள் எடுத்திருக்கிறார்.
ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடி இருக்கும் கே.எல்.ராகுல் பெர்ஃபார்மன்சை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இருவரை விட அதிகப்படியான ரண்களை ராகுல் அடித்துள்ளார்.