Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

Continues below advertisement

ஒலிம்பிக் போட்டியின் போதும் அரசியல் செய்து விட்டதாகவும், PT உஷா மருத்துவமனைக்கு வந்தது ஏன் என்றும் பல விஷயங்களை உடைத்து பேசியுள்ளார் வினேஷ் போகத்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத், இந்தியா சார்பில் இறுதிச் சுற்றுக்கு சென்றார். ஆனால் இறுதி போட்டியின் போது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக சொல்லி தகுதிநீக்கம் செய்யப்பட்டது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினேஷ் போகத்தை இந்திய சம்மேளனத் தலைவர் பி.டி.உஷா நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. அதே நேரத்தில் வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, அவருக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத். அடுத்த அதிரடியாக காங்கிரஸில் இணைந்து ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

ஆனால் பாரிஸில் உண்மையாக நடந்தது என்ன என்பது தொடர்பாக பேட்டி ஒன்றில் அனைத்து விஷயங்களையும் உடைத்துள்ளார் வினேஷ் போகத். இதுதொடர்பாக பேசிய அவர், ‘அங்கு எனக்கு எந்த இந்திய ஒலிம்பிக் சம்னேளத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிடி உஷா என்னை மருத்துவமனையில் சந்தித்து ஃபோட்டோ மட்டும் எடுத்து கொண்டார். என்னிடம் ஆறுதலாக எதுவும் சொல்லாமல் எனக்கே தெரியாமல் அந்த ஃபோட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். எல்லா இடங்களிலும் மூடிய கதவுகளுக்கு பின் அரசியல் நடக்கிறது. பாரிஸிலும் அந்த அரசியல் தான் நடந்தது. அதனால்தான் நான் மனம் உடைந்துவிட்டேன். மல்யுத்தத்தை விட வேண்டாம் என நிறைய பேர் எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் அரசியல் நடக்கும் போது நான் அதில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். 

என்னை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து நானே வழக்குப்பதிவு செய்தேன். ஆனால் இதை மத்திய அரசு செய்திருக்க வேண்டும். நான் பாரிஸில் தனியாக போராடிய போது மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்தியா சார்பாக நான் போட்டியில் கலந்து கொள்ளும் போது, எனக்கு உதவ வேண்டியது அவர்களது கடமை. இந்த அரசியலால் தான் நான் மல்யுத்தத்தில் இருந்து விலகிவிட்டேன்” என உருக்கமாக கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram