Hardik Pandya Divorce : ’’ரொம்ப கஷ்டமா இருக்கு!’’மனமுடைந்த ஹர்திக்..ஹர்திக் நடாஷா விவாகரத்து

Continues below advertisement

இலங்கைக்கு எதிரான டி 20 தொடர்ல் ஹர்திக் பாண்ட்டியவிற்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் கேப்னாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதில் இருந்து தற்போது சமூக வலைதள பக்கத்திக் இரு வீரர்களின் ரசிகர்களும் மாறி மாறி Hashtag-களை ட்ரெண்ட் செய்து கொண்டு வருகின்றனர். 
 
டி20யில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதில் இருந்து இந்திய டி 20 அணியின் புதிய கேப்டன் யாரென்ற கேள்வி இருந்து வந்தது, இந்த நிலையில் அணியின் பயிற்சியாளர் கம்பீர் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என தேர்வு குழுவிடம் சொன்னதாக செய்திகள் வந்தது,

ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித்தின் கேப்டன்சி ஹர்திக்கிடம் கொடுத்த போது சூர்ய குமார் உள்பட பல சீனியர் பாண்ட்டியாவின் மீது கோவத்தில் இருந்தனர்.

அதே நிலை இந்திய அணியில் வரக்கூடாது என்பதற்காக ஹர்திக் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கூப்பிட்டு மும்பையில் நடந்தது போல இந்திய அணியில் நடக்கக்கூடாது என்று இருவரிடம் பேசி பிரச்சனையை முடித்து வைத்தாலும் ரசிகர்கள் இதை விடுவதாக இல்லை.

தற்போது எக்ஸ் பக்கத்தில் ஹர்திக்கின் ரசிகர்கள் we want captain hardik என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், நீங்க மட்டும் தான் ட்ரெண்ட் பண்ணுவீங்களா நாங்களும் பதிலுக்கு பண்ணுவோம்னு சூர்யகுமார் யாதவின் ரசிகர்களும்,  we want captain sky என்ற ஹாஸ்டேக்கை பதிலுக்கு ட்ரெண்ட் பண்ணிட்டு வராங்க,

மேலும் நேற்று நடைப்பெறுவதாக இருந்த இந்திய அணி தேர்வு கூட தேர்வு குழுவினரிடம்  கேப்டன் யார் என்ற எதிர்மறை கருத்துக்களால் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram