Fans Angry on Gambhir : Gill-ஐ நம்பாதீங்க.. Selection-ல் சொதப்பிய கம்பீர் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Continues below advertisement

கம்பீர்  வந்தா எல்லாம் மாறும், நிறைய போல்டான முடிவுகள் எடுப்பார் நினைச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு இலங்கைக்கு எதிரான இந்திய அணி தேர்வு கடும் விமர்சன வலையில் சிக்கி உள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது, 
இதில் ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், எல்லாரும் எதிர்ப்பார்த்தது போலவே டி20 அணிக்கு கேப்டனாக சூர்யா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் கம்பீர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் என்னவென்றால் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு format-க்கும்  சுப்மன் கில்லை vice கேப்டனாக நியமிக்கப்பட்டது, ,

டி20 அணியில் ஹர்திக் பாண்ட்டியா இருக்கும் பட்சத்தில் எந்த அடிப்படையில் சுப்மன் கில்லை  நியமித்தனர், கில் தான் இந்திய அணியின் வருங்கால கேப்டன் என்பதையே குறிக்கிறது, கில்லை விட டி20யில் நல்ல ஃபர்ம் மற்றும் நல்ல ஸ்டிரைக் ரேடில் ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக கூட இந்திய அணியில் இடமில்லை என்பதும், ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் நான்கு ஒப்பனர்ஸ் இருந்தும் கூட கில் தன்னோட ஓப்பனிங் ஸ்பாட்டை விட்டு கொடுக்காமல ஆடினது, ருதுராஜ், அபிஷேக் சர்மாவை பேட்டிங் ஆர்டரை மாற்றி கொடுத்தது என கில் சுயநலமாக செயல்ப்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது, 
இதில் வேடிக்கை என்னவென்றால் கில்லை விட ருதுராஜும், அபிஷேக் சர்மாவும் கில்லை விட அதிக ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்கள்.

இது ஒரு புறம் இருக்க டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்ட்டியவை ஒரு வீரராகவே அணியில் வைத்திருப்பது என கில்லையும், கவுதம் கம்பீரையும் வருதெடுத்து வருகின்றனர்.

அடுத்தாக ஒருநாள் அணியில் வருங்கால கேப்டனாக ஸ்ரேயால் ஐயர் அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் அதிலும் சுப்மன் கில்லை துணைக்கேப்டனாக நியமித்து இருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. 

கம்பீரின் இந்த முடிவு இந்திய அணியை எப்படி கொண்டு போக போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram