Ruturaj gaikwad vs Shubman Gill : ஒதுக்கப்படும் ருதுராஜ்.. சுயநலவாதியா கில்? ஆதாரத்தை காட்டும் Fans
இதுக்கு மேல ருதுராஜ் என்ன பண்ணனும், இதெல்லாம் நியாமா கம்பீர் என்று இந்திய ரசிகர்கள் இலங்கைக்கு எதிரான தொடரில், ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியில் இடம்பெற்றதில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார், அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் பதக்கம் வென்றது,
இது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20களில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் கூட ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டனாக இருப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இந்திய நிர்வாகமோ ருதுராஜூக்கு பதிலாக சுப்மன் கில்லை கேப்டனாக அறிவித்தது.
அந்த தொடரில் சுப்மன் கில் சுயநலமாக செயல்பட்டதாக ரசிகர்கள் விமர்சனங்களை எடுத்து வைத்து உள்ளனர், அந்த தொடர் முழுவதும் ஓப்பனராக ஆடினார் கில், ஆனால் ருதுராஜின் பேட்டிங் ஆர்டரை எல்லா போட்டிகளில் மாற்றிக்கொண்டே இருந்தார் கில்,
ருதுராஜோட டி20 ஸ்டேட்ஸ் கில்லை விட நல்லாவே இருக்கு இது வரைக்கும் 20 டி20க்கள் இந்தியக்காக ஆடி இருக்கிற ருதுராஜ் ஒரு சதம் 4 அரைசதங்களுடன் 633 ரன்களை 143 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி அசத்தியுள்ளார்
மறுமுனையில் சுப்மன் கில் 19 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் 3 அரைசதத்துடன் 505 ரன்களை 139 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியுள்ளார்,
மேலும் ருதுராஜை விட அதிக டாட் பால்கள் கில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல ஜிம்பாவுவேக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்த அபிஷேக் சர்மாவையும் அணியில் இருந்து கழற்றிவிட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த சஞ்சுவையும் அணியிலிருந்து தூக்கிவிட்டு, நல்ல ஆட்டத்தை வெளிப்படித்திய ருதுராஜையும் அணியில் சேர்க்காமல் சரியாக ஆடாமல் இருக்கும் சுப்மன் கில்லை ஏன் அணியில் எடுத்தீர்கள் கம்பீர் என்றும் we want rutu back என்ற #டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.