Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

Continues below advertisement

ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது தொடர்பாக அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2025- சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் நேற்று தொடங்கியது. பரபரப்பாக நடைபெறும் ஏலத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் வீரர் அஸ்வினை சென்னை அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்து அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வார்கள். 2008 முதல் 2015ம் ஆண்டு வரை முதல் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு விளையாடியதில் இருந்து, அந்த அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சென்னை அணியில் விளையாடியது, கற்றுக்கொண்டது தான் சர்வதேச போட்டிகளில் நான் இவ்வளவு தூரம் பயணிக்கு உதவியுள்ளது. சென்னை அணிக்காக நான் கடைசியாக விளையாடி 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2015ல் கடைசியாக விளையாடியேனேன்.

எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை அணி மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளது. விலை, ஹோம்கமிங் என பல்வேறு விதமாக கூறினாலும், 2011ம் ஆண்டு சண்டை போட்டு என்னை ஏலத்தில் எடுத்தது போன்று மீண்டும் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறந்த உணர்ச்சிகள் அது. அன்புடென் ஃபேன்ஸ் என்பதை கடந்த 9-10 ஆண்டுகளாக பார்க்கிறேன்.  ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதெல்லாம், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது கடினமாக இருந்தது. அந்த அணிக்கு விளையாடும்போது ரசிகர்கள் எனக்காக குரல் எழுப்பமாடார்கள். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram