IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singh

Continues below advertisement

ஐபிஎல் 2025 மெகா ஆக்ஷனில், முதல் வீரராக 18 கோடி ரூபாய்க்கு, RTM card முறையில் ஏலம் போய், அனைவரையும் வாயை பிளந்து பார்க்க வைத்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ் தீப் சிங்..

2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் முதல் வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஏலத்திற்கு வந்தார். அவரை குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பம் முதல் அர்ஷ்தீப் சிங்கை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது தான் ஹைலைட். 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் போட்டி போட்டி ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.  இவ்வாறாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய பஞ்சாப் அணிக்காக ஆடிய அர்ஷ்தீப் சிங்கை  15.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஏலம் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி அவரை ரூபாய் 18 கோடிக்கு RTM மூலம் தக்க வைத்தது.   

பஞ்சாப் கிங்ஸ் அணி நினைத்திருந்தால் அர்ஷ்தீப் சிங்கை, 18 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு முன்பாகவே தக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வளவு தொகைக்கு போக மாட்டார் என்று தவறாக கணக்கு போட்ட பஞ்சாப் அணி இறுதியாக ஆர் டி எம் முறையில் அர்ஷ்தீப் சிங்கை ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதற்கு பருத்தி மூட்டை குடவுனிலையே இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பஞ்சாபை பொலந்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram