Indian Team Announcement : ஆட்டத்தை தொடங்கிய கம்பீர்கேப்டனாக களமிறங்கும் SKY? அணியில் அதிரடி மாற்றம்

Continues below advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது, இதற்கான 15 பேர் கொண்ட அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கம்பீர் பயிற்சியாளராக முதன்முதலில் சந்திக்கும் தொடர் என்பதால் இந்த தொடருக்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்தே இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதன்படி இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, ஏற்கேனவே ரோகித் இல்லாத நேரங்களில் ஹ்ர்திக் பாண்ட்டியா கேப்டனாக செயல்ப்பட்டார். ஆனால் 2026 டி20 உலகக்கோப்பையை மனதில்  வைத்து சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றதால், ஜிம்பாவே தொடரில் சிறப்பாக விளையாடிய கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அணியில் கண்டிப்பாக இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் ஜிம்பாவே தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதுமட்டுமில்லாமல் ஒரு நாள் அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், விராட் கோலி, ரோகித், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கபடலாம் என தெரிகிறது. மேலும் சொந்த காரணங்களுக்காக ஹர்திக் பாண்ட்டியா விலகியுள்ளதால் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், ஆகியோர் இடம் பெறலாம் என்றும் டி 20 உலகக்கோப்பையில் இடம் பெறாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷன் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணி  களமிறங்கும் முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி எப்படி விளையாட போகிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram