Hardik vs Surya Kumar Yadav | ஹர்திக், சூர்யகுமாருக்கு டோஸ் விட்ட கம்பீர்! ”இது MI இல்ல புரியுதா!”

Continues below advertisement

ஹர்திக்கை கூப்பிடு இனிமேல் எந்த சர்ச்சையும் வர கூடாது என்று தான் பயிற்சியாளராக வந்த முதல் தொடரிலேயே அதிரடி காட்ட ஆரம்பித்துள்ளார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர். 

இந்திய அணி இலங்கையில் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.ரோகித் சர்மா டி20களில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணியின் புதிய கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் எல்லாரும் ஹர்திக் பாண்ட்டியா கைக்கு தான் கேப்டன்சி பொறுப்பு வரும் என்று எதிர்ப்பார்த்தனர், காரணம் என்னன ஹர்திக் ஏற்கெனவே ஐபிஎல்லில்  கேப்னாக செயல்ப்பட்ட அனுபவம் இருக்கு, ஆனால் ஹர்திக்கோட ஃபிட்னஸ் தான் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கு, இந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்னால் கூட காயத்தில் இருந்த  ஹர்திக் ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று நேரடியாக டி 20 உலகக்கோப்பையில் விளையாடினார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. 

மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக  ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டட்து சூர்யாகுமார் உள்பட பல முக்கிய வீரர்களை  புகைச்சலை கிளப்பியது. குறிப்பாக சூர்ய குமார் யாதவ் ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி பறிக்கப்பட்டதை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்ட் உடைந்து போன்ற ஸ்டோரி ஒன்றை பகிர்ந்தது ஹர்திக் மேல் அவர் கோபமாக இருப்பதை வெளிக்காட்டியது, மேலும் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் படு மோசமாக விளையாடி ப்ளே ஆப் சுற்றுக்கு  கூட செல்லாமல் வெளியேறியது அந்த அணியின் சீனியர் வீரர்கள் உள்பட பலரையும் கடுப்பை கிளப்பியது.

இவ்வளவு பிரச்சனை இருப்பதை அறிந்த கம்பீர், இது இந்திய அணியில் தொடர கூடாது என்பதற்காக  சூர்யா குமார் யாதவிற்கு கேப்டன்சி பொறுப்பு  வழங்கப்பட வேண்டும் தேர்வு குழுவினாரிடம் பரிந்துரைத்துள்ளார் என்ற தகவல் கூறப்படுகிறது. 

ஆனால் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி கொடுத்தால் சர்ச்சையாகும் என்பதை உணர்ந்த பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சூர்யா மற்றும் ஹர்திக்கிடம் இருவரையும் கூப்பிட்டு இதகுறித்து பேசியுள்ளனர்.

மேலும் கம்பீர் தான் பயிற்சியாளராக தொடங்கும் முதல் தொடர் என்பதால் ஹர்திக் மற்றும் சூர்யாவிடம் இது என்னோட முதல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்தது போல இதுல எந்த பிரச்னையும் வரக்கூடாது என்றும் கேப்டன்சி பொறுப்பை சூர்யாவுக்கு கொடுப்பதை ஹர்திக்கிடம் நேரடியாக சொன்னதாகவும், இது முழுக்க முழுக்க இந்திய அணி வருங்கால நலனுக்காக தான் செய்துள்ளேன் என்று பாண்ட்டியவிடம் கூறியுள்ளார். 

கம்பீரின் இந்த முடிவுக்கு பாண்ட்யாவும் ஒகே சொன்னதாகவும், சூர்யாவின் கீழ் விளையாட எந்த பிரச்சனையும் இல்லை என்று ஹர்திக் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.. 


இப்படி தான் களமிறங்கும் முதல் தொடரியிலேயே அணியில் ஒற்றுமை இருக்க வேண்டுமே இந்திய அணியின் நலனை  கவுதம் கம்பீர் எடுக்கும் அதிரடி முடிவுகள் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram