
Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அபிகேட் குண்டுவெடிப்பில் ISIS பயங்கரவாதிகள் 13 அமெரிக்க ராணுவ வீரர்களையும் எண்ணற்ற உறுப்பினர்களையும் கொன்று குவித்தனர்.
இன்றிரவு, அந்த அட்டூழியத்திற்கு காரணமான பயங்கரவாதியை கைது செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க நீதியின் வாளை எதிர்கொள்ள அவர் இப்போது இங்கே வருகிறார்.
(உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டினார்கள். துணை அதிபர் ஜே.டி-யும் கைகள் தட்டினார்)
(ட்ரம்ப் கைத்தட்டலை பார்த்து ரசித்தார்.)
உடனே ட்ரம்பும் கைகளை சத்தமாக தட்டினார்.
( ஒரு நிமிடம் கை தட்டலால் அரங்கமே அதிர்ந்தது)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
“இந்த அரக்கனை கைது செய்ய உதவிய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார் ட்ரம்ப்.
13 குடும்பங்களுக்கும் இது முக்கியமான நாள்.
ஆப்கானிஸ்தானில் நடந்த மோசமான நாளில் 42 பேருக்கும் மேல் படுகாயமடைந்னார்.
அவர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டதையும் நான் நன்றாக அறிவேன். அது ஒரு கொடூரமான நாள்.
நடந்ததை பார்த்த புதின் இது தான் என் வாய்ப்பு என்று சொன்னார். அது அவ்வளவு மோசமானது. அப்படி நடந்திருக்க கூடாது.
நான் பல பெற்றோர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பேசினேன்.
அவர்கள் அனைவரும் இன்று இரவு எங்கள் இதயங்களில் அவர்கள் இருந்தார்கள். மகிழ்ச்சியுடன் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
அந்த சூழ்நிலையில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.