Muthukumaran Vs Soundariya: தகுதியே இல்லாதவ சீண்டிய முத்துக்குமரன்! சௌந்தர்யா Thuglife

பிக் பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த செளந்தர்யாவிற்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இது பிக்பாஸ் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் சீசன் 8 முடிந்து ஒரு மாதம் ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர் அதில் பங்கேற்றவர்கள் அந்த வீட்டிற்குள் நடந்த விசயங்களை பகிர்ந்து வருகின்றனர். இச்சூழலில் தான் இரண்டாவது இடத்தை பிடித்த செளந்தர்யா குறித்து முத்துக்குமரன் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது முத்துக்குமரன் தனியார் YOU TUPE சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், அதில், செளந்தர்யா பற்றி உங்கள் நிலைபாடு என்ன என்ற கேள்வி எழுப்பப் பட்டது.

அதற்கு முத்துக்குமரன்,” நான் இப்பவும் சொல்றேன் செளந்தர்யா பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாத ஆள் தான்.  இது முத்துக்குமரனனின் கருத்து. முத்துக்குமரனனின் கருத்து வெகுஜன மக்களின் கருத்தாக இருக்க முடியாது. 

சௌந்தர்யா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார் என்றால், அவர் செய்தது மக்களுக்கு பிடித்துள்ளதால் தான், அவருக்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அவர்களுக்கு சௌந்தர்யாவை பிடித்துள்ளது. எனக்கும் கூட சௌந்தர்யாவை பிடித்திருக்கலாம். ஆனால் பிக் பாஸ் போட்டியில் நீடிப்பதற்கான உழைப்பை சௌந்தர்யா செலுத்தினாரா என்றால், இல்லை என்கிற பார்வையில் இருந்து கூறுவது முத்துக்குமரன் தான்.  சௌந்தர்யா அந்த  விளையாட்டில் முன்னேறுவதற்குத்தான் தகுதியில்லாத நபர். அதனால்தான் பிக்பாஸ் கேட்கும்போது எல்லாம் சொன்னேன். தகுதி இல்லாத ஆள் என்ற நினைக்கக்கூடிய ஒருவரை ஏன் மக்களுக்கு பிடிக்கக் கூடாது. மக்களுக்கு பிடிச்சுருக்கே”என்று முத்துக்குமரன் கூறியுள்ளார்.


இதனிடை இவரது கருத்துக்குக்கு பதிலடி கொடுக்கும்படி செளந்தர்ய வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியில், ” நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதம் ஆச்சு. ஆனாலும் இன்னும் சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார் . அவர் முத்துக்குமரன் என்ற பெயரை சொல்லவில்லை என்றாலும் அவரைத்தான் கூறியிருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola