Joe Biden | இருக்காரா? இல்லையா? ஜோ பைடன் எங்கே? ரேடாரில் சமூக வலைதளங்கள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து நான் விலகுகிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்த பிறகு தற்போது வரை ஜோ பைடன் பொது வெளியில் தோன்றாமல் இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது, இந்நிலையில் ஜோ பைடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் உலகம் முழுவதும் சமூக வளைத்தளங்களில் பரபரத்து வருகிறது
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 அன்று நடைப்பெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களத்தில் நிற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது..
அதற்கேற்றது போல் தேர்தலுக்கான பிரச்சாரங்களிலும் இருக்கட்சி வேட்பாளர்களும் கடுமையாக மோதிக்கொண்டர்.. இப்படி பட்ட சூழலில் தான் அதிபர் வேட்பாளர் என முன்மொழியப்பட்டு வந்த ஜோ பைடன் திடிரென தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என கடந்து ஞாயிறன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். மேலும் தனக்கு பதிலாக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை வேட்பாளராகவும் முன்மொழிந்தார்.
இது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, ஏன் திடிரென ஜோ பைடன் இந்த முடிவை எடுத்தார், இந்த அறிவிப்புக்கு பிண்ணனில் இருக்கும் காரணம் என்ன என்று எந்த விதமான அதிகார்ப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளிவரவில்லை.
இதில் மேலும் பல்ஸை எகிற வைப்பது என்னவென்றால் ஜோ பைடன் என்ன ஆனார், நலமுடன் இருக்கிறாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. அவருக்கு இறுதியாக கோவிட் தொற்று ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக டெலவேரில் உள்ள ரெஹோபோத் பீச் ஹவுசில் ஜோ பைடன் தங்கி ஓய்வெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதியின் பொது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்தியை அமெரிக்கர்கள் பலர் நம்ப மறுக்கின்றனர்.
மேலும் அதிபர் பைடனின் இந்த வார நிகழ்வுகள் குறித்த அட்டவணையும் வெளியிடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது, இத்தகைய சூழலில் பத்திரிக்கை மற்றும ஊடகத்தினரை சந்திக்காமல், எந்த விதமான தகவலையும் வெளிபடுத்தாமல் ஜோ பைடன் இருப்பது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
கடைசியாக ஜோ பைடன் பொது வெளியில் தென்ப்பட்டது டெலவேர் விமான நிலையத்தில் தான் அதன் பிறகு என்ன ஆனார் என்பது தற்போது வரை தெரியவில்லை.
இந்நிலையில் பைடன் எங்கே போனார் என்று #coup என்ற ஹாஸ் டேக்கை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர்.
அதில், எங்கே போனார் ஜோ பைடன், அவர் ஏன் இதுவரை வெளியே வரவில்லை, அவருக்கு ஏதும் உடல்நிலை கோளாறா? யாருடைய அழுத்ததால் பைடன் வேட்பாளராக நிற்கவில்லை, ஏன் பின்வாங்கினார் போன்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
இதனால் #Coup என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது, இது மட்டுமில்லாமல் பைடன் பதவி விலகளுக்கு பின்னால் எதோ பெரிய சதி நடந்து இருப்பதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்
இந்நிலையில் கோவிட் அறிகுறிகள் குறந்துள்ளதாகவும், பைடனின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது, அவர் தன்னுடைய ஜனாதிபதிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.