Sambo Senthil | ஆம்ஸ்ட்ராங் படுகொலை! சிக்கிய மாஸ்டர் மைண்ட்! யார் இந்த சம்போ செந்தில்?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வழக்கில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த கொலைக்கு முளையாக செயல்பட்டு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தது பிரபல ரவுடி சம்போ செந்தில் தான் கூறப்படுகிறது.
யார் இந்த சம்போ செந்தில்? அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக ஆர்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக இந்த கொலை அரங்கேறியதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்கினர்.அதில் அதிமுக, பாஜக, தமாகா திமுக உள்ளிட்ட கட்சியினரின் ஈடுபாடு இருப்பது தெரிய வந்து வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டியது. திமுகவை சேர்ந்த அருள் மற்றும் சதீஷ், பாஜகவை சேர்ந்த அஞ்சலை மற்றும் செல்வராஜ், அதிமுக மலர்க்கொடி, ஹரிதரன், மற்றும் தமாகா சேர்ந்த ஹரிதரனும் இந்த வழக்கில் கைதாகினர்.
இந்நிலையில் தமாகாவை சேர்ந்த ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரனையில், பிரபல ரவுடி சம்போ செந்திலின் தலையீடு இந்த கொலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் ஈடுபட்டவர்களுக்கு பனப்பறிமாற்றம் செய்தது சம்போ செந்தில் தான் என கூறப்படுகிறது.
சம்போ செந்திலுக்கு இதுபோன்ற வேலைகள் ஒன்றும் புதிதல்ல. ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திர குமார் கொலை, முத்தியால்பேட்டையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை என பல கொலை வழக்குகள் அவர் மீது உள்ளது. காவல்துறையினர் அவரை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வலைவீசி தேடி வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து கொண்டு தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது தான் சம்போவின் வேலையாம். இதன் மூலம் கிடைக்கும் தொகைகளை அவர் ட்ரேடிங்கில் முதலீடு செய்கிறாராம். இந்நிலையில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் ஆம்ஸ்ட்ராங் ஈடுபட்டு வந்ததாகவும் அதில் ஏற்பட்ட தொழில்போட்டி காரணமாக தான் இந்த கொலை சம்பவம் நடந்தது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது வழக்கை வேறு கோணத்தில் எடுத்து சென்றுள்ளது.
முன்னதாக சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் செந்தில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பதுங்கி உள்ளதாக போலீஸுக்கு ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை போலீஸ் கண்ணில் மண்ணை தூவி வரும் சம்போ செந்தில் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.