Ebrahim Raisi accident : ஈரான் அதிபர் மரணம்!திட்டமிட்ட சதியா? உலகப் போர் வெடிக்குமா?

Continues below advertisement

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக சென்ற 2 ஹெலிகாப்டர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், ரைசி சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியிருப்பது திட்டமிட்ட சதியா என பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் பின்னணியில் இஸ்ரேல், அமெரிக்கா இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர்,  கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த ஹெலிகாப்டரில் ஈரானிய வெளியுறவு அமைச்சரும் அந்த ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார். இந்த விபத்தில் ஈரான் அதிபர் உட்பட அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஹெலிகாப்டர் தீப்பிடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இப்ராஹிம் பைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால் அவை எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளதால் இது உண்மையாகவே விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என பேச்சு ஆரம்பமாகியுள்ளது. அதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல், ஈரான் இடையே நடந்து வரும் மோதல். பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது. ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மாதம் 13ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்துக்கு வந்தது. இதனை தொடர்ந்து ஈரானின் இஷ்பஹான் நகரில் உள்ள விமானப்படைத்தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பதன் பின்னணியில் மெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருக்கலாம் என பேச்சு ஆரம்பமாகியுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடக்கப் போகிறதா, மூன்றாம் உலகப் போருக்கு இந்த பிரச்னை காரணமாக அமையுமா என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram