Salem differently abled : மூன்று சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி! அசத்தும் மாற்றுத்திறனாளி

சேலத்தில் மூன்று சக்கர வாகனத்தில் சென்று உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கிருஷ்ணமணி என்பவர் மும்பையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். யாரிடமும் உதவி என்று கேட்காமல் தானே சம்பாதித்து சொந்தமாக நின்று வாழவேண்டும் என்று லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். 

இதற்கு முன்பாக அவரது இல்லத்தில் சிறிதாக கடை வைத்து ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் போதிய வருமானம் இல்லாததால் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் சேர்ந்துள்ளார். மூன்று சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு உணவு டெலிவரி செய்யும் அவர் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருக்கிறார். 

காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் இரண்டு மணி நேரம் பணியில் ஈடுபடுவதாக கிருஷ்ணமணி தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்தக் காலில் நின்று சம்பாதித்து வாழவேண்டும் என்று கூறியுள்ளார். நண்பர்களும், சக ஊழியர்களும் தனக்கு உறுதுணையாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola