Donald Trump : காதில் பாய்ந்த குண்டு.. நூலிழையில் தப்பிய டிரம்ப்! திக் திக்.. காட்சிகள்
Continues below advertisement
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்நிலையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜோ பிரைடன், டொனால்ட் ட்ரம்பிய இருவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்றைய தினம் அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் வழக்கமான தன்னுடைய பாணியில் பேசி வந்தார் ட்ரம்ப். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்து, டிரம்பை நோக்கி குறி வைத்து சுடத் தொடங்கினார்.
இதில் ட்ரம்பின் வலது காதில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது, அவர் உடனடியாக தன்னுடைய காதை பிடித்துக் கொண்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த பொடியதிற்கு கீழே குனிந்தார், உடனடியாக ட்ரம்பை சுற்று போட்ட பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்தியதாக தெரிகிறது.
இதனால் அங்கே கூடி இருந்த மக்கள் கூட்டம் அலறியது. இதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் சில நொடிகளில் இந்த சம்பவங்கள் அனைத்தும் அரங்கேற, ட்ரம்பை அறன் போல் சுற்றிக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் மேடையில் இருந்து அவரை பத்திரமாக கீழே அழைத்துச் சென்றனர்.
அப்போது மேடையில் இருந்து கீழே இறங்கும் போது, ஆவேசமாக தன்னுடைய கைகளை உயர்த்த, பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர். லேசாக டொனால்ட் ட்ரம்ப் காதிலிருந்து இரத்தம் வழிவதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தற்போது அவர் பாதுகாப்பாக, நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் என்ற விசாரணைகள் சூடு பிடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிரைடன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் இம்முறை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க தேர்தலுக்கு முன்பாகவே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement