Sellur Raju Audio : ”மதுரையில் அதிமுக அழியுது” செல்லூர் ராஜு ஆபாச பேச்சு! பறிபோகும் பதவி?

வயிறு எரியுது அண்ணா.. கட்சிய அலிச்சிட்டாரு.. என்று கூறி செல்லூர் ராஜு குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கடிதம் கொடுத்த அதிமுக நிர்வாகி ராமசுப்பிரமணியனை, பச்சை பச்சையாக ஆபாசமாக செல்லூர் ராஜு திட்டிதீர்க்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் முத்தையா  இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக  மதுரை விமானம் நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமி இடம் தெற்கு தொகுதியை சேர்ந்த சில நிர்வாகிகள் மதுரையைக் காப்பாற்றுங்கள் என கூறி வருத்தபட்டனர்..

குறிப்பாக அதே தொகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற அதிமுக நிர்வாகி  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பணிகளை சரிவர செய்யாததால் மதுரையில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தோல்வி அடைந்ததாக விரிவாக கடிதமாக வழங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரை தொகுதிக்கான தோல்வி குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராமசுப்பிரமணியம் சென்னை சென்றதை அறிந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  ராமசுப்பிரமணியை தொடர்பு கொண்டு  ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தியை புகழ்ந்தது, வேறு சில காரணங்களால் எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜு மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், செல்லூர் ராஜுவின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola