
Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWIST
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் DOGE அமைப்பிலிருந்து விவேக் ராமசாமி பதவி விலகியுள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார் விவேக் ராமசாமி. பின்னர் ட்ரம்ப் க்கு வழிவிட்டு தேர்தலில் இருந்து விலகினார். இதனையடுத்து துணை அதிபராக விவேக் ராமசாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேடி வேன்ஸ்க்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தை அளித்தது.
பின்னர் ட்ரம்ப் அதிபரான பிறகு விவேக் ராமசாமிக்கு முக்கிய அரசு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் நேரடியாக அவருக்கு அரசு பதவி வழங்காமல் doge அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் DOGE என்ற அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவர் பதவிக்கு எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் தலைவராக நியமித்தார். எலான் மஸ்கின் நண்பராகவும் ட்ரம்பின் நம்பிக்கையாகவும் திகழ்ந்தார் விவேக் ராமசாமி. அமெரிக்க அரசை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் டோனால்டு ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று இன்று அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே doge அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் விவேக் ராமசாமி. மேலும் பதவி விலகிய பின்னர் இதுகுறித்து பதிவிட்ட விவேக், ஓஹியோ மாகாணத்தில் தனது அடுத்த பயணத்தை விரைவில் துவங்க இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரச்சார வேலைகளுக்காக தான் இப்போதே பதவி விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசின் உயர் பதவி மீது விவேக் ராமசாமிக்கு ஆசை இருப்பதாகவும், அதிபர் பதவிக்கு போட்டியிட்டு விலகியவர், அரசின் ஓர் அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு தன் திறமைக்கு ஏற்றது அல்ல என எண்ணி விவேக் ராமசாமி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக சொல்லப்படுகிற