ABP News

Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

Continues below advertisement

பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு ஆளுநர் குறித்து விமர்சித்துவிட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சட்டமன்ற தலைவர்களுக்கான மாநாடு இன்று பீகாரில் நடைபெற்றது. அதில் தமிழக சட்டமன்ற தலைவர் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றிருந்தார். மாநாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வலுவாக்குவது எப்படி என்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. அப்போது பேசிய அப்பாவு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்."அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார், அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் அவர் தலையிடுகிறார்.. அரசியலமைப்பு விதிகளை ஆளுநர் கேலிக்கூத்தாக்கி வருகிறார். அரசு விஷயங்களில் தமிழக ஆளுநரின் தலையீடு கவலை அளிப்பதாக உள்ளதாக வருத்தம் தெரிவித்திருந்தார் அப்பாவு. அப்போது  குறிக்கிட்ட மாநிலங்களவை துணை தலைவர்,அப்பாவுவை தொடர்ந்து பேச அனுமதி மறுத்ததாக சொல்லப்படுகிறது
இதனையடுத்து தமிழக சபாநாயகர் அப்பாவு அவையிலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துள்ளார். 

மேலும் அப்பாவுவின் கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தமிழக அரசுக்கு ஆளுநர் ரவிக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola