Trichy Mukkombu : 0.250 TMC தண்ணீர் - டெல்டா பாசனத்தை வலுப்படுத்தும் புதிய கதவணைகள்..
திருச்சி மாவட்டம் முக்கம்பூர் அணையின் சிறப்பை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.. கர்நாடகாவில் இருந்து வரும் அகண்ட காவேரி ஆறானது இங்கு காவேரி, கொள்ளிடம், புள்ளாம்பாடி கால்வாய் மூன்று ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் வந்தது என்று வரலாறு.மேலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் நீர் வெளியேறி கடலில் கலந்து வந்தது இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது இதையடுத்து காவிரிப்பாசனப் பகுதி பொறியாளராக 1829இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட இவர் கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் 6 அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணி 1834- தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846இல் அணையின்மீது பாலம் உள்ளிட்டவை கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.