Trichy NIT tribal student | திருச்சி NIT-ல் சீட்! பழங்குடியின மாணவி அசத்தல்! நெகிழ்ச்சி பேட்டி

Continues below advertisement

திருச்சி NIT-ல் சீட்! பழங்குடியின மாணவி அசத்தல்! நெகிழ்ச்சி பேட்டி

பொறியியல் நுழைவுத் தேர்வான JEE தேர்வில் வெற்றி பெற்று, திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்று அசத்தியுள்ளார் பழங்குடியின மாணவி ரோஹினி.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சை மலை என்னும் மலைப் பகுதி உள்ளது. இங்கு தொலைத்தொடர்பு, இணையதள சேவை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இதற்கிடையே பச்சை மலையை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோஹிணி. பச்சை மலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் அரசுப் பொதுத் தேர்வில் 423 மதிப்பெண்கள் எடுத்தார். அதன் பிறகு பொறியியல் படிப்பு படிப்பதற்காக JEE நுழைவு தேர்வு எழுதி, 73.8 சதவீதம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து ரோஹினி, திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். மாணவிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக மாணவி கூறும் போது, படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram