SP Lakshmanan on ADMK | ”6 பேர்! 2.5 மணிநேர மீட்டிங்! நெருக்கடியில் EPS” போட்டு உடைத்த S.P.லட்சுமணன்

Continues below advertisement

மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் 6 பேர் இபிஎஸ்-ஐ ரவுண்டு கட்டியுள்ளதாகவும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாகவும் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் உட்கட்சி பூசல் அவ்வப்போது ஹாட் டாப்பிக்காக மாறி வருகிறது. பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுசெயலாளர் ஆனார் இபிஎஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து அதிரடி காட்டினார். ஆனால் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அதிமுக சீனியர்களே இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்குவதாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சி வலுவடையும் என்ற குரல் அதிகமாக எழுந்து வருகிறது. அதிமுகவினர் மீண்டும் இணைய வேண்டும் என சசிகலா, ஓபிஎஸ் தூது அனுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில் அதிமுக சீனியர்கள் இபிஎஸ்-ன் வீட்டுக்கே சென்று இரண்டரை மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக; அவர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக கலகக்குரல் எழும். அந்தக் குரல் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று பலமுறை சொல்லிவந்தேன். நேற்று சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே வைத்து கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள். தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல… பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை… இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்… இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை… பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்… இனியும் தாமதிக்கக் கூடாது… இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள். எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க… வாதங்கள் தடித்து… முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும். அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்! நாரதர் கலகம் மட்டுமல்ல… ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்… முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்!” என கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram