
Advocate vs Police | ”Uniform-ஐ கழட்டிட்டு வா”குடிபோதையில் ரகளை அதிரடி காட்டிய போலீஸ்
”Uniform-ஐ கழட்டிட்டு வா”குடிபோதையில் ரகளை அதிரடி காட்டிய போலீஸ்
வெள்ளை சட்டையா காக்கி சட்டையா வா மோதி பார்ப்போம் என்று வழக்கறிஞர் ஒருவர் மதுப்போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,நேற்றிரவு வழக்கறிஞர் சக்திவேல் முருகன்எ ன்பவர் போதையில் தனது பைக்கை ஓட்டிவந்துள்ளார்.
அப்போது, சமயபுரம் டோல் பிளாசா தாறுமாறாக வந்த பைக் அருகில் இருந்த மூன்று வாகனங்களின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்தது. இது
பற்றிய தகவல் அறிந்த சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் நித்தியானந்தம், விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளார்.
அப்போது வக்கீல் சக்திவேலுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் வழக்கறிஞர் சக்திவேல் முருகன், நான் வெள்ளை சட்டையா போட்டு இருக்கேன் நீ காக்கி சட்டை போட்டு இருக்கேன் வா ஒரு கை பார்ப்போம் என சப் இன்ஸ்பெக்டர் நித்யானந்தத்தை மிரட்டியதோடு மட்டுமில்லாமல், விரைவில் உன் காக்கி யூனிஃபார்மை கழட்டுகிறேன் என பேசியுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளரை வழக்கறிஞர் மிரட்டும் வீடியோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.