Shiv das meena | விருப்ப ஓய்வா.. No ஸ்டாலின் அதிரடி! சிவ்தாஸ் மாற்றம் பின்னணி?
தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டது விவாதத்தை கிளப்பிய நிலையில், மாற்றத்திற்கான பின்னணி என்ன என சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதன்மை செயாளர் வெளியிட்டார். கூடுதல் பொறுப்பு என எதுவும் போடாததால் அவர் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியபிக்கப்பட்டார்.
சிவ்தாஸ் மீனாவின் பூர்வீகம் ராஜஸ்தான். இவர் ஜெய்ப்பூரில் சிவில் எஞ்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒரு செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவர் மத்திய துறைக்கு மாற்றப்பட்டார். மத்தியில் சுற்று சூழல் மற்றும் வனத்துறைக்கு கீழ், மாசு கட்டுப்பாடு மத்திய பிரிவின் தலைவராக இவர் பணியாற்றி வந்தார். அதன் பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டார். திமுக ஆட்சியில் அவர் நகராட்சி நிர்வாக துறை செயலாலராக பதவி வகித்து வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமணம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தான் நியமனம் செய்யப்படுவர் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் முதல் தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளரான கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவர் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதமே முடிந்த நிலையில் காலியாக இருந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் முன்னாள் தலைமை செயலாளராக சிவ்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஓய்வு பெறாத நிலையில் தற்போது தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது கேள்விக்குள்ளனது.
இவரை மாற்றியதற்கான முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சிவ்தாஸ் மீனாவுக்கு முதல்வர் ஸ்டாலினிடம் நல்ல பெயர் உள்ளது. அதேவேளையில் சிவ்தாஸ் மீனா விரைவில் பணி ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவ்தாஸ் மீனா ஓய்வு பெற்றாலும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவே ஸ்டாலின் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவ்தாஸ் மீனாவுக்கு அக்டோபர் மாதத்துடன் பனி முடிவடைய உள்ள நிலையில் அவர் அதற்கு VRS கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.