”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி

Continues below advertisement

அமைச்சர் பிரபு நள்ளிரவு 1 மணிக்கு கேரளாவுக்கு கனிமங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளார்.

கனிமவளத்துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக அமைச்சர் பிரபு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே அனைத்து கல்குவாரிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கு திடீரென ஆய்வு மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளார்.

கேரளாவுக்கு கனிமங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்து, அவற்றின் போக்குவரத்து அனுமதிகளை சரிபார்த்தார். அதோடு சேர்த்து அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஒரு எடை மேடையை ஆய்வு செய்த அவர், அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள எடையும், லாரி மற்றும் கனிமங்களின் உண்மையான எடையும் சரியாக உள்ளதா என்று அவரே சரிபார்த்தார்.

இந்த ஆய்வில், 18 வாகனங்களில் லாரி மற்றும் கனிமங்களின் மொத்த எடை சுமார் 54,000 கிலோ இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தினமும் முறையாக பணிகள் நடக்கிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படும் நிலையில் அதில் அளவுக்கு அதிகமான கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் இருக்கிறது. பெரும்பாலும் நள்ளிரவில் தான் இந்த கனிமங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அமைச்சர் பிரபு நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை தானே நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola