சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!

Continues below advertisement

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு மாதம் காத்திருந்து கொலை செய்துள்ள பகீர் தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டுவருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற 17 வயது சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர்   உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முத்துமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கியதில் முத்து மணிக்கு  காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர். 

இந்நிலையில் நேற்றிரவு குபேந்திரன் மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நின்றபோது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவரது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் ,ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலயே குபேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடி கும்பலை தேடிவருகின்றனர். வடக்கு ஆவணி மூல வீதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கார் பார்க்கிங்கில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக  எடுக்கப்பட்ட கடைகளில் சமூகவிரோத கும்பல்களை இரவில் தங்க வைப்பதாகவும் தொடர்ந்து அந்த பகுதியில் மது அருந்துவது போதை பொருட்கள் பயன்படுத்துவது என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola