Tirupati Stampede | Pawan VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சையில் உள்ளவர்களை சந்திக்க, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால், இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்ததும் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பின் பவன் கல்யான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் மருத்துவமனை விட்டு பவன் வெளியேறாமல் அதே இடத்தில் செய்தியாளர்களை சந்த்திது கொண்டிருந்தார். அப்போது ஜெகனின் கார் உள்ளே வர ஜெகன் ஆதரவாளர்கள் பவன் டவுன் டவுன் ஜெகன் ஜெய் ஜெகன் ஜெய் என மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதான படுத்தி ஜெகனை மருத்துவமனைக்குள் அனுபுவதற்குள் பவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில் திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சையில் உள்ளவர்களை சந்திக்க, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால், இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மருத்துவாமனை வளாகம் போர்களம் போல காட்சியளித்தது.