TN Police vs TNSTC : ’’போலீஸுக்கே டிக்கெட்டா?License எடு..FINE கட்டு..’’நடவடிக்கை எடுக்குமா அரசு?
’’போலீஸுக்கே டிக்கெட்டா?License எடு..FINE கட்டு..’’நடவடிக்கை எடுக்குமா அரசு?
நாங்குநேரியில் காவலர் ஒருவரை டிக்கெட் வாங்க சொன்னதால் அரசு பேருந்து நடத்துநருக்கும் காவலரும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாட்டில் காவல்துறைக்கும் போக்குவரத்துத்துறைக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்கதையாகிவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த காவலரை டிக்கெட் எடுக்க வலியுறுத்திய நடத்துனருக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்த நடத்துனர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அரசு பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் காவலர்கள் பயணிக்க முடியாது என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.
இததன் தொடர்ச்சியாக நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிக பயனிகளை ஏற்றி வரும் அரசு பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள், நோ பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்ட இருந்த அரசு பேருந்துகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என வள்ளியூரில் 3 அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறை
தலா ரூ.500 அபராதம் விதித்தது பேசுபொருளானது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வாரன்ட் இருந்தும் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்னதாக நடத்துனரும் காவலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துதுறைக்கும் காவல் துறைக்கும் நடுவே ஆன இந்த கோல்டு வார் எப்போது ஓயும் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.