Thoothukudi Collector | களத்தில் இறங்கிய கலெக்டர் கதிகலங்கிய அதிகாரிகள் ”ரோட்டை இப்பவே தோண்டுங்க”
களத்தில் இறங்கிய கலெக்டர் கதிகலங்கிய அதிகாரிகள் ”ரோட்டை இப்பவே தோண்டுங்க”
இந்த ரோடோ தரத்தை இப்பவே காட்டுங்க என்று தூத்துக்குடியில் புதிதாத போடப்பட்ட தார் சாலையை தோண்டி மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு செய்த சம்பவம் அதிகாரிகளை கலகத்தில் ஆழ்த்தியது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது நட்டாத்தி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கொம்புகாரன்பொட்டலில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பெரிதும் சேதம் அடைந்த ஏரல் ஆற்று பாலம் சீரமைப்பு பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், குரங்கணியில் புதிதாக போடப்பட்ட புறவழிச் சாலையின் தரத்தை அறிய சாலையில் பள்ளம் தோண்டி எவ்வளவு உயரத்தில் சாலை போடப்பட்டுள்ளது என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டார்,.
அப்போது கடினமாக முயற்சி செய்து சாலையின் ஒரு பகுதியை பெயர்த்து அதனை ஆய்வு செய்து சாலை தரத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் திடீரென சாலையின் தரத்தை ஆய்வு செய்த சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளை கலகத்தில் ஆழ்த்தியது.