Chandrababu Naidu vs Jagan Mohan Reddy | ஆட்டத்தை தொடங்கிய சந்திரபாபு! காலியாகும் ஜெகன்மோகன் கூடாரம்
ஏற்கனவே மக்களவைத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடிமேல் அடி வாங்கி சோர்ந்து போய் உள்ள முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, மேலும் ஒரு இடியை இறக்கி இருக்கிறார்கள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்பிக்கள்.. தங்களுடைய கட்சி பதவியையும் எம்பி பதவியையும் அவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் காலியாக தொடங்கி விட்டதா ஜகன்மோகன் ரெட்டியின் கூடாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது..
அண்மையில் நடந்து முடிந்த ஆந்திரா மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட ஒஎஸ்ஆர் காங்கிரஸ் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் கடந்த தேர்தலில் 18 மக்களவை எம்பிக்களை கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டி இடம் தற்போது வெறும் 4 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.
அதே நேரம் 16 இடங்களில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கவே காரணம் நாங்கள் தான் என்று மார்தட்டி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் இரண்டு ராஜ்ய சபா எம்பி- கள் தற்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு வரை எம்பி பதவி வகிப்பதற்கான கால அவகாசம் இருக்கும் நிலையில், பீதா மஸ்தான் ராவ் ஜாதவ் மற்றும் வெங்கடரமண ராவ் மொப்பி தேவி ஆகிய இரு மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக ராஜ்ய சபா சபாநாயகர் ஜப்தீப் தங்கர் இடம் கடிதத்தை வழங்கியுள்ளனர்.
அதனை மாநிலங்களவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். இது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விளகிய இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
டீலிங் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், பீதா மஸ்தான் ராவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் ராஜ்ய சபாவில் எந்த பிரதிநிதிகளும் இல்லாமல் இருந்த தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஒயசார் காங்கிரஸ் கட்சியில் எம்பி தன்னுடைய எம்பியாக ராஜ்ய சபாவில் கலமரக்கிறது
இந்நிலையில் இது தொடக்கம் தான் என்றும் விரைவில் வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலி ஆகி ஜகன்மோகன் ரெட்டி மட்டுமே அங்கு தனியாக நிற்பார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கந்தா ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
நிலையில் ஏற்கனவே அடிமை அடிவாங்கியுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு இந்த சம்பவம் பேரிடியை இறக்கி உள்ளது.