Police Press meet Speech About Tanjore Teacher Murder | ‘’CLASSROOM-ல கொலை நடக்கல!’’ தஞ்சை ஆசிரியர் படுகொலை டிஐஜி பகீர் REPORT

‘’CLASSROOM-ல கொலை நடக்கல!’’  தஞ்சை ஆசிரியர் படுகொலை  டிஐஜி பகீர் REPORT

தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாடம்  நடத்திக்கொண்டிருக்கும் போதே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி என்பவரை 30 வயதான மதன்குமார் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

 

ரமணியைப் பெண் கேட்டு வீட்டுக்கும் சென்றுள்ளார். ஆனால் அவருக்குப் பெண் தர ரமணியின் பெற்றோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், கோபத்தின் உச்சிக்குச் சென்றார்.

 

இந்தநிலையில் இன்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கே நேரடியாகச் சென்றார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தில் குத்தினார். இதனால் ரமணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே, ரமணி உயிரிழந்தார். 

இதற்கிடையே ஆசிரியை ரமணியைக் குத்திக் கொலை செய்த மதன்குமார் என்பவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம், தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola