Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்திக்கவுள்ளார். டெல்லியிலிருந்து அவரது கார் ஹத்ராஸுக்கு புறப்படும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை 2ம் நாள் உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், போலே பாபா என்ற ஆன்மிகவாதி நடத்திய ஆண்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்ள வந்துள்ளனர். அந்த நிகழ்வின் முடிவில் தான் 121 பேர் உயிரிழந்த கோர சம்பவம் அரங்கேறியது. மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
முறையான பாதுகாப்பு, சரியான வசதி எதுவுமே அங்கு செய்யப்படவில்லை என்று சொல்லபடுகிறது. போலே பாபா தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டு திரும்புகையில், அவருடை காலடி மண்ணை எடுப்பதற்காக, ஒரு கூட்டம் முண்டியடித்துள்ளது. மேலும் காற்றோற்றம் இல்லாததால் சிலர் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றுள்ளனர்.
அப்போது ஒருவர் தடுக்கி கீழே விழ, அவர் மீது பலர் விழ, பதற்றமான மக்கள் கூட்டம் அங்கிருந்து ஓடி தப்பிக்க முயன்ற போது, இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. தற்போது வரை 121 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லபடும் நிலையில், போலே பாபா தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஹத்ராஸுக்கே நேரில் சென்று சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ராகுல் நேரில் சென்று
ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி.