
VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!
பிரபல யூடியூபர் VJ சித்து வெளியிட்ட வீடியோ மக்களிடம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் VJ சித்துவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் VJ சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய VJ சித்து தற்போது சித்து வ்ளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது குழுவுடன் சித்து வெளியிடும் வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இதுதவிர்த்து சித்துவின் மொட்டை மாடி வித் சித்து நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் VJ சித்து நிக்கல் குந்தல் தெரியாதா என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளப்பி வருகிறது. நிக்கல் குந்தல்னா ஒரு விளையாட்டுனு சொல்லப்படுகிறது. அந்த விளையாட்டின் படி நண்பர்கள்கிட்ட டீல் போட்டுக்கிட்டா உட்காரும் போது குந்தல் என்றும் நிற்கும் போது நிக்கல் என்றும் சொல்ல வேண்டும்.
அப்படி சொல்லவில்லை என்றால் எதிர்தரப்பில் இருப்பவர்கள் கடுமையாக தாக்குவார்கள். இந்த விளையாட்டை விளையாடித்தான் அதை தன்னுடைய YOUTUPE ல் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோல், நண்பர் ஒருவரை சித்து கடுமையாக தாக்குகிறார். கால்களாலும் எட்டி உதைக்கிறார். உடனே அருகில் இருக்கும் நண்பர் சித்துவை தடுக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து VJ சித்துவை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். விளையாட்டாக இருந்தாலும் இதற்கு ஒரு அளவு இல்லையா என்றும்.. காமெடி என்ற பெயரில் மிகவும் கேவலமாக சித்து சமீபகாலமாக நடந்து வருகிறார் என நெட்டிசன்கள் விஜே சித்துவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.