Tirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!
கள்ளக்காதலி போன் எடுக்காததால் கள்ளக்காதலன் நண்பர்களோடு சேர்ந்து நகையை திருடியும் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தும் மிரட்டிய சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். நள்ளிரவில் இவருடைய வீட்டிற்குள் புகுந்த கும்பல் கத்தி முனையில் இவர்களை மிரட்டியும் வீரபத்திரனின் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டதில் சுரேஷ் என்பவர் கும்பலாக சேர்ந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட சுரேஷ் ,” வீரபத்திரன் காட்பாடியில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனது மனைவி சத்யாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருடைய மனைவி சத்யாவிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாளைடையில் சத்யாவை அழைத்துக்கொண்டு வீரபத்திரன் அவருடைய சொந்த ஊருக்குச் சென்று விட்டார். தொடர்ந்து சத்யாவுடன் போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் பலனளிக்காததால் சத்யாவின் ஞாபகத்திலேயே இருந்தேன்.
சத்யா போன் எடுக்காததால் தனது நண்பர்களான ஜாபார்,கர்ணண்,மணிகண்டன், சசிதரன்,மேகராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்களை கார் மூலம் ராஜபாளையம் பகுதிக்கு சத்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்துகாரில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை மட்டும் சத்யாவின் வீட்டிற்கு அனுப்பி பிரச்சனை செய்ய மாஸ்டர் போட்டேன்.வீட்டிற்கு சென்ற நபர்கள் சத்யாவின் கணவர் வீரபத்திரன் மற்றும் சத்யாவின் தாய் மற்றும் வீரபத்திரனின் 2 பிள்ளைகளை தாக்கி அறையில் தள்ளி பூட்டி வைத்தனர். சத்யாவை நிர்வாணமாக்கி வீடியோவும் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்த 15 சவரன் தங்கநகை, ஒரு லட்சம் ரொக்க பணத்துடன் காரில் தப்பி சென்றோம்” என்று கூறியுள்ளார்.கள்ளக்காதலி போன் எடுக்காததால் கள்ளக்காதலன் நண்பர்களோடு சேர்ந்து நகை திருடியதும் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.