பதவி வேணுமா VIDEO CALL வா அந்தரங்க வீடியோ வைத்து மிரட்டல் சிக்கிய தவெக மா.செ?

Continues below advertisement

கட்சியில பதவி கிடைக்கணும்னா சில விஷயங்களை எனக்காக அட்ஜஸ்ட் செய்யணும் என்று த.வெ.க-வில் இணைய வந்த பெண்ணை ஆடையின்றி அந்தரங்க வீடியோக்கள் எடுத்து மிரட்டுவதாக ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பெண்மணி ஒருவர் ஆதாரங்களுடன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் விஜய் மோகன். இந்த நிலையில்  ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தவெக-வில் இணைய ஆர்வம் காட்டி விஜய் மோகனை அணுகியுள்ளார். அப்போது கட்சி நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன் என்று கூறிய விஜயமோகன் செல்போனில் அந்த பெண்மணியிடம் பேசத் தொடங்கியுள்ளார். 

முதலில் இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கிய அந்த பெண்ணிடம், மெல்ல மெல்ல ஆசை வார்த்தை கூறி கட்சியில் பதவி வேண்டுமென்றால் நீ சில விஷயங்களை எனக்காக செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

முதலில் மறுத்த அந்த பெண்மணி பின்னர், விஜய் மோகனிடம் வீடியோ காலில பேச தொடங்கியுள்ளார். நெருங்கி பழகத் தொடங்கிய விஜயமோகன், ஆடையின்றி வீடியோ காலில் பேசுமாறும், அப்படி செய்தால் மட்டுமே கட்சி பதவிகள் கிடைக்கும் என்று அந்த பெண்ணை நிர்பந்தம் செய்துள்ளார்.

பின்னர், அந்த பெண்ணின் சில அந்தரங்க வீடியோக்களை விஜய் மோகன் ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு, அதை காட்டி மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்தப் பெண்ணை நிர்பந்தித்தாகச் சொல்லப்படுகிறது.

மேலும் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, அப்பெண்ணிடன் அவர் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளார் விஜய் மோகன். 

இதனால் மணமுடைந்த அந்த பெண்மணி தன்னை காப்பாற்றுமாறு ராணிப்பேட்டை தவெக எம்.எல்.ஏ தாஹிராவிடம் முறையிட்டுள்ளார். அதையடுத்து, விஜய் மோகனை அழைத்த எம்.எல்.ஏ தாஹிரா, வீடியோவை டெலிட் செய்யுமாறு சொல்லிசி ,  இனி இந்த பெண்ணிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த விஜய் மோகன், உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டேன் என்று பலர் மூலமாக தன்னை மிரட்டுவதாகவும், தான் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அப்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. 

இந்நிலையில் தான் தன்னுடைய வீடியோக்களை டெலீட் செய்ய வேண்டும், மேலும் இதே போன்று பல பெண்கள் விஜய் மோகனிடம் மாட்டிக்கொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்டு விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்மணி முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அப்பெண்மணி, விஜய் மோகன் என்ன செய்தார், எப்படியெல்லாம் மிரட்டினார் என்பதையும் வீடியோவில் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola