TVK Vijay : தவெகவில் இணைந்த முக்கிய திரை பிரபலம்! கொண்டாடும் தொண்டர்கள்! வெளியான வீடியோ!

Continues below advertisement

விஜய்யின் தவெக வரும் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்கும் நிலையில், இந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படத்தின் நடிகர் இணைந்துள்ளார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி புளியங்குளம் ஊர் பகுதியில் நடந்தது. இதற்காக வருகை தந்த தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு ஊர் மக்கள் மற்றும் கட்சியினர் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.
 
தொடர்ந்து அரங்கத்தில் விழா நடந்தது. அப்போது பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மேடை முன்பு இருந்த குழந்தைகள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேடையில் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசியதும் பொதுமக்கள் உற்சாகமாக கைத்தட்டினர்.
அதைத் தொடர்ந்து ஊர்பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் அஜிதா ஆக்னல் முன்னிலையில் இணைந்தனர். தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பொதுமக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அஜிதா ஆக்னல் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

அப்போது வாழைத் திரைபடத்தில் நடித்த பொன்வேல் என்பவரும் தன்னை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டார். இதற்காக அவரை மாவட்டப் பொறுப்பாளர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இயக்குநர் மாரிசெல்வராஜிக்கு சொந்த ஊர் புளியங்குளம். இந்த புளியங்குளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram