Bus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்

எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்

ஒரகடம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் U turn ல் மாறி மாறி மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 24 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வைப்பூர்  சந்திப்பில்  நாவலூர் டு தாம்பரம் செல்லும் அரசு பேருந்து நாவலூரில் இருந்து  ஒரகடம் தாம்பரம் சாலையை குறுக்கே கடக்க முற்பட்டபோது,  ஒரகடம் தாம்பரம் மார்க்கமாக செல்லுகின்ற டாரஸ் லாரி மற்றும் தனியார் நிறுவன பேருந்து என இரண்டு வாகனங்களும் அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் டாரஸ் லாரி அரசு பேருந்து மற்றும் தனியார் தொழிற்சாலை பேருந்தை இடித்து இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola